கும்பம் ராசி அன்பர்களே.! சில தடைகள் ஏற்பட்டாலும் அது சீக்கிரம் சரியாகும்.
இன்று பிரச்சனைகளை நீங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவீர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை உயர்த்துவீர்கள். உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். நட்பால் நன்மை ஏற்படும். சகோதர வழியில் ஒற்றுமை ஏற்படும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். நூதன பொருள் சேர்க்கை ஏற்பட்டு விடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கின்றது. முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி சந்தோஷத்தை ஏற்படுத்தும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு ஆகியவை இருக்கக்கூடும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தெளிவான சிந்தனையும் நிம்மதியும் இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் அது சீக்கிரம் சரியாகும்.
பெண்கள் எதையும் ஆக்கப்பூர்வமாக செய்வீர்கள். இல்லத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்திற்காக உழைப்பீர்கள். சொகுசான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காதலும் கைகூடிவிடும். காதலில் சந்தோசம் ஏற்படும். மாணவர்களுக்கு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். மாணவர்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும். கல்வியில் மென்மேலும் முன்னேறிச் செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு