கும்பம் ராசி அன்பர்களே.! புத்திக் கூர்மையுடன் உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்.
இன்று நல்ல நண்பர்கள் உங்கள் பக்கத்தில் நிற்பார்கள். நல்ல தகவல்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் தகவல்கள் நல்ல முன்னேற்றத்தை தரும். வரவும் செலவும் சமமாகும். இன்று சிலரை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலையை இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தாய் வழி தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வாகன பழுது பார்க்க கூடிய சூழல் உருவாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் வரும். அதனால் வாக்குவாதங்கள் போன்றவை நடக்கும். அதனை சரிசெய்து கொள்ளவேண்டும். வாக்குவாதங்கள் நிகழ்ந்தால் நீங்கள் பின் வாங்கிவிடவேண்டும். உத்தியோகத்தில் செயல்திறன் கூடும். வேகம் அதிகரிக்கும். புத்திக் கூர்மையுடன் உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்.
வாழ்க்கை கண்டிப்பாக முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். கவலைப்படாமல் இருக்க வேண்டும். சகோதர ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கும் சூழல் இருக்கும். பெண்களுக்கு நிதானமான போக்கும் அழகான கண் பார்வையும் இருக்கும். கையில் கண்டிப்பாக காசு புரளும். காதலில் உள்ள வேறுபாடுகளை எல்லாம் சிறப்பை கொடுக்கும். காதல் கைக்கூடி மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்கக் கூடிய சூழல் உருவாகும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கல்வி தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்