Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! குழப்பங்கள் தீரும்….! சிந்தனை மேலோங்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! முயற்சிகள் யாவும் வெற்றி ஏற்படுத்தும்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகை கண்டிப்பாக வந்து சேரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் சரியாகும். சகஜமாகப் பேசி அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். ஆழமான சிந்தனை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கிவிடும். பிள்ளைகள் மூலம் எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளுக்காக கொஞ்சம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். இன்று முயற்சிகள் யாவும் வெற்றி ஏற்படுத்தும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். அதனை மட்டும் நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் வெற்றியை கொடுக்கும். கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

நம்பிக்கையுடன் எதையும் செய்ய வேண்டும். பெண்கள் உற்சாகமாக எதிலும் ஈடுபட முடியும். காதல் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். மனக்கசப்பை கொடுத்தாலும் சந்தோஷத்தை கொடுக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் சாதிக்கக் கூடிய அமைப்பு இருக்கும். மேற்கல்விக்காக முயலுங்கள் எல்லாம் முன்னேற்றகரமாக செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |