Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! நிர்வாகத்திறமை வெளிபடும்….! சிக்கல்கள் தீரும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எதையும் சமாளிக்கக்கூடிய திறன் உங்களிடம் இருக்கும். 

இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். எதிர்மறையாக பேசுபவர்களிடம் கொஞ்சம் நல்ல அன்பு காட்டுவீர்கள். எதிரிகள் தொல்லை இருந்தாலும் அவர்களை உங்களால் சமாளிக்க முடியும். கெட்டவர்களை கூட அனுசரித்து செல்ல கூடிய மணம் உங்களிடம் இருக்கும். அன்பால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து விடுவீர்கள். சிக்கல்கள் எல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை உருவாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி சிறப்பாக நடக்கும். ஆதாய பணவரவு இருக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். இல்ல தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத அளவிற்கு குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். எதிர்ப்புகளைத் தாண்டி வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விடுவீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய திறன் உங்களிடம் இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் கூட சாதகமான பலனை கொடுக்கும்.

நெருக்கடியான நேரங்களில் கூட உங்களால் எதையும் செய்ய முடியும். உங்களுடைய திறமை வெளிப்படும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்பட்டாலும் கண்டிப்பாக வந்து சேரும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் நாட்டம் செல்லும். அதற்கான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். காதல் கைகூடும். காதலில் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். காதலில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்துவிடும். தொல்லை கொடுத்தவர்கள் கண்டிப்பாக விலகிச்செல்வார்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பும் ஆசிரியரின் அரவணைப்பும் இருக்கின்றது. அதனால் கல்வியில் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள்

Categories

Tech |