கும்பம் ராசி அன்பர்களே.! பொறுமை தேவை.
இன்று தேவையற்ற சிந்தனைகள் மனதிற்குள் உருவாகிக்கொண்டிருக்கும். அக்கம்பக்கத்தில் பேச்சை குறைக்க வேண்டும். தேவை இருப்பின் மட்டும் உரையாடவேண்டும். சுற்றுப்புற சூழலை உணர்ந்து செயல்பட வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்பதான் உங்களுடைய முடிவுகள் இருக்கும். வியாபாரத்தில் அளவான மூலதனம் வேண்டும். பணத்தை சேமிக்க வேண்டும். அதிகப்படியான பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமை தேவை. உதவிகள் கிடைக்கும். போட்டிகள் விலகி செல்லும். எதிரிகளின் தொல்லை இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனிக்க முடியும். அலுவலக வேலைகளில் மட்டும் தாமதம் இருக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு இன்று நல்ல பலன்கள் கூடும் கூடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வியில் திறம்பட ஜெயிக்க முடியும். அதற்கான மனப்பக்குவம் இருக்கும். புதிய சிந்தனை உருவாகும். காதலில் புதிய சிந்தனை உருவாகும். காதலில் உள்ள சிரமங்களும் சிக்கல்களும் தீர்ந்துவிடும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்