கும்பம் ராசி அன்பர்களே.! பரிபூரணமான செயல்களால் நல்ல பெயர் இருக்கும்.
இன்று துன்பம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். எந்த ஒரு கஷ்டத்தையும் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். உங்களுடைய ரகசியத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தேவையில்லாத அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். தெய்வீக வழிபட்டால் நன்மை ஏற்படும். சில காரியங்களை விட்டு பிடிக்க வேண்டும். கூடுதல் பணிகள் இருக்கும். தொழிலில் நல்ல முறையில் வியாபாரம் நடக்கும். நடைமுறை பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பணவரவை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். பொருட்களை இரவல் கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம். தொழிலில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகளை சமாளித்து வெற்றி கொள்ள முடியும். பரிபூரணமான செயல்களால் நல்ல பெயர் இருக்கும்.
வாழ்க்கை துணை மூலம் இன்பம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். காதல் கைக்கூடும். காதலில் சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. மனதிலிருந்த குழப்பமான நிலைக்கு மாறிவிடும். மாணவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். கோவில் குளங்களுக்கு சென்று வரலாமா என்று திட்டங்கள் இருக்கும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் அக்கறை செலுத்த கூடாது. நல்ல முறையில் படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம் அடர் நீலம் மற்றும் மஞ்சள்