கும்பம் ராசி அன்பர்களே.! கவன சிதறல் ஏற்படும்.
இன்று கடன் சுமை குறையும். காரிய வெற்றி இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் மூலம் முன்னேற்றம் காணகூடிய தகவல்கள் கிடைக்கும். சுறுசுறுப்பாக பணிகளைச் செய்வீர்கள். மற்றவர்களின் வேலைக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகல சந்தோஷ வாய்ப்புகளும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக ஈடுபடவேண்டும். கவனச்சிதறல் ஏற்படும். அதனால் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சி பிறக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காதல் பிரச்சனையை கொடுக்காது. நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தெளிவு பெற முடியும். கல்வியில் ஜெயிக்க முடியும். கல்விக்காக நேரத்தை ஒதுக்கி வெற்றியைக் காண்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் இளம் சிவப்பு