Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! புகழ் கூடும்….! புதிய எண்ணங்கள் தோன்றும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! கவனமாக செயல்பட வேண்டும்.

இன்றைய நாள் பாராட்டும் புகழும் கூடும் நாளாக இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கின்றது. நீங்கள் இருக்கக்கூடிய வீட்டை மாற்றி விட்டு வேறு வீட்டிற்கு போகலாமா என்ற எண்ணம் இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். சகோதர ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் இணையக் கூடும். குடும்பப் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். பயணத்தின் போது மிகவும் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் கவனம் தேவை. காதல் சில நேரங்களில் மனக்கசப்பை ஏற்படுத்திவிடும்.

நல்லபடியாக செல்வது போல தான் இருந்தாலும் சில வார்த்தைகள் மனதிற்கு கவலையை ஏற்படுத்தி விடும். ஆகையால் பேச்சில் கவனம் தேவை. அதிக நேரம் பேச வேண்டாம். மாணவர்களுக்கு இன்று கல்வி பற்றிய சிந்தனை இருக்கும். கல்வியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். கல்விக்காக செய்யக்கூடிய விஷயங்களில் முன்னேற்றமும் காத்திருக்கின்றது. இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்:  வெளிர் மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |