Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பிரச்சினைகள் குறையும்….! தீர்க்கமான முடிவெடுப்பீர்கள்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எல்லாவிதமான நன்மையும் கிடைக்கும்.

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டாகும். அக்கம்பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலனளிக்கும். நல்ல வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். எதிலும் தீர்க்கமான முடிவு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக சரியாகும். எல்லாவிதமான நன்மையும் கிடைக்கும். உயர்ந்த எண்ணங்களால் உயரத்திற்கு உங்களால் செல்லமுடியும்.

சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக அணுகி நல்ல முடிவை எடுப்பீர்கள். மாணவர்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கும். தடைகளை நினைத்து எப்பொழுதும் வருத்தப்பட வேண்டாம். பொறுமை காப்பது நல்லது. காதல் சந்தோஷத்தை கொடுக்கும். மாலை நேரத்திற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதெல்லாம் சரியாகும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |