Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மனக்கசப்புகள் சரியாகும்….! செலவுகள் அதிகரிக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்ய வேண்டும்.

இன்று சுப செலவுகள் ஏற்படும் நன்றாக இருக்கின்றது. பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிட்டும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். தொழிலில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். மனம் தளராமல் இருக்க வேண்டும். எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் சரியாகும். இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்கக்கூடிய சூழல் இருக்கும். வீண் செலவை கட்டுப்படுத்த வேண்டும். உறவினர் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்ய வேண்டும். கடந்த கால நினைவுகள் எல்லாம் இப்பொழுது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பழைய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். காதலில் உள்ளவர்கள் மனம் தளர வேண்டாம். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். அனுசரித்து சென்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். பாடங்களை நல்லபடியாக படிப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |