Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! நிம்மதி கிடைக்கும்….! திருப்பங்கள் உண்டாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். 

இன்று நிதி நெருக்கடிகளை சமாளிக்க கூடிய நாளாக இருக்கும். எப்படியும் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல திருப்பம் கண்டிப்பாக ஏற்படும். எல்லாவிதமான நன்மைகளும் கண்டிப்பாக கிடைக்கும். முயற்சிகளெல்லாம் முன்னேற்றத்தைக் கொடுக்கும். உயர்வான சூழலும் நல்ல எண்ணங்களும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். விமர்சனங்களை கண்டிப்பாக சரியான முறையில் அணுகி பெற்றுக் கொள்ள முடியும். பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி கொள்ளும் நாளாக இருக்கும். உத்யோக உயர்வு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்கும். கல்யாண கனவுகள் கண்டிப்பாக நினைவாகும். காரிய வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். உடன்பிறப்புகளும் உதவியாக இருப்பார்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு அவசியம்.

சில காரியங்கள் தாமதமாக நடந்தாலும் மாலை நேரத்திற்குள் எல்லாம் சரியாகும். தொழில் வியாபாரத்திற்காக பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். லாபத்தைப் பன்மடங்கு பெருகி கொள்ள முடியும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். காதலில் உள்ளவர்களுக்கு மனதிற்குள் சஞ்சலம் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். குழப்பங்கள் ஏற்பட்டாலும் தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும். கல்வி கற்கக் கூடிய அமைப்பு இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் பச்சை

Categories

Tech |