கும்பம் ராசி அன்பர்களே.! நேர்மையாக செல்வீர்கள்.
இன்று தனவரவும் ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் புதிய பதவிகள், வாகனம் வாங்க கூடிய வாய்ப்புகள், வசதி வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். புகழும் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு உருவாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் இருக்கும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறிவிடும். எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் சிறப்பாக செய்ய முடியும். குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நேர்மையாக செல்வீர்கள். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
இன்றைய நாளை புதிய தொழில் காண அஸ்திவாரம் இடுங்கள். இறைவழிபாட்டில் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும். மனதுக்குள் நிம்மதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. பெண்களுக்கு இறைவழிபாட்டில் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும். கண்டிப்பாக பெண்கள் சாதிக்கும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களும் கல்வியில் வெற்றி பெறக்கூடிய அம்சங்களும் இருக்கும். காதலில் உள்ளவர்கள் மனதில் நினைத்தவரையே கரம்பிடிக்க கூடிய சூழல் இருக்கின்றது. திருமணத் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா