Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! செலவை குறைக்க வேண்டும்….! திருப்பங்கள் உண்டாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! போட்டிகளும் பொறாமையும் குறைந்துவிடும்.

இன்று சிலரது பேச்சுக்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அவர்கள் எதார்த்தமாக எதையாவது சொல்லப்போய் உங்களது மனதை அது பாதிக்கும். நீங்களும் ஒரு நேரம் போல் இருக்க மாட்டீர்கள். முன் கோபத்தோடு வார்த்தைகளை விட்டு விடுவீர்கள். அதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகுவதற்கான சூழல்கள் இருக்கும். பொது இடத்தில் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபாரம் நடைமுறைகள் சராசரியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் கண்டிப்பாக மாறிவிடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் பொறாமையும் குறைந்துவிடும்.

பழைய பாக்கிகளும் வசூலாகும். தொழிலில் அடுத்த கட்டத்திற்கு உங்களால் எளிமையாக செல்லமுடியும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் கண்டிப்பாக இருக்கும். மற்றவரிடம் எதார்த்தமாக பேச வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாக இருக்கும். கல்வி பற்றிய சிந்தனை இருக்கும். கண்டிப்பாக மேற்கல்விகான முயற்சியில் வெற்றி காத்திருக்கின்றது. மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |