Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பிரச்சனைகள் குறையும்….! நிதானம் இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும்.

இன்று நல்ல கருத்தை தவறாகக் கருதும் சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு தயவு செய்து நீங்கள் செல்ல வேண்டாம். மன வருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேர்வார்கள். பயணிகள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சமாளிக்க கூடிய திறமை இருக்கின்றது. அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுகிறீர்கள். கணவர் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து விடும். நிதானமான போக்கு இருக்கின்றது. சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான சூழல் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். இல்லத்தில் மழலை செல்வம் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் அனுபவிக்க முடியும். புதிய தொழில் தொடங்க முடியும். பெண்களுக்கு சுய மரியாதையும் சமூக அக்கறையும் இருக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் மனக்கஷ்டங்கள் இருக்கும். பார்த்து பக்குவமாக கையாள வேண்டும். அப்போதுதான் காதல் கைகூடும். மாணவர்களுக்கு முடிவுகளில் தெளிவு வேண்டும். எதையும் சிறப்பாக சிந்திக்க வேண்டும். யோசித்து முடிவு எடுத்தால் வெற்றி நிச்சயம். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 8                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |