Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…சஞ்சலங்கள் தீரும்..பயணத்தால் தேகம் பாதிக்கும்..!!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று சஞ்சலங்கள் தீரும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பயணத்தால் தேகம்  பாதிக்கலாம். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது.

இன்று  நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு கூடும். கடினமான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள்.இன்று  பணவரவில் எந்தவித பிரச்சினையும் இல்லை, கடன் பிரச்சினைகள் அனைத்துமே இன்று  கட்டுக்குள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே தான் இருக்கிறது.

இன்று மாணவர்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக போராடுவார்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |