கும்பம் ராசி அன்பர்களே, இன்று ஏழுமலையானின் ஆசிர்வாதத்துடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். முன்னேற்றமும் இன்று கூடும். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். உங்களுடைய நண்பரின் உதவியால் இன்று நல்ல காரியம் சிறப்பாகவே நடக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு மட்டும் எடுக்காமல் இருங்கள். வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடியுங்கள். கையிருப்பு இருக்கும் கவலை வேண்டாம். ஆனால் பணம் வந்து சேரும். வேளை தவறி சாப்பிட வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எடுத்த காரியங்கள் தாமதமாகத்தான் நடைபெறும் கவலை வேண்டாம். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களுமே ஓரளவு சிறப்பாகவே இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் பேசுங்கள்.
அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு சிறப்பான நாள் என்றே சொல்லலாம். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும், கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
மஞ்சள் நிறத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். எப்பொழுதுமே வாரம் வாரம் சனிக்கிழமை கொடுப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்