Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும்.. மன நிம்மதி உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் வெளிநாட்டு தொடர்பு லாபங்களை இன்று பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடையில்லாமல் உயர்வுகளை அடைந்து மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் பெறுவது மனநிம்மதி உண்டாகும். நீங்கள் நடந்துகொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தாலே நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

எதிலும் திட்டமிட்டு செயலாற்றுதல் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீண் செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கோபப்படாமல் இருங்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தாரிடம் அன்பாகவே நடந்துகொள்வீர்கள். காரிய வெற்றி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமுடன் இருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள்  அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |