Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..புதிய உற்சாகம் பிறக்கும்..சிக்கல்கள் தீரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தொலை தூர நல்ல தகவல்கள் மூலம் நன்மை நடக்கும். புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கலாம்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளையும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் ஏதும் செல்ல வேண்டியிருந்தால் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் செல்லுங்கள். மிக முக்கியமாக கவனமாக செல்லுங்கள். யாரிடமும் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் கும்ப ராசி நேயர்கள் இன்று  சிறப்பை பெற முடியும். அது மட்டுமில்லாமல் இன்று ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும், சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |