கும்பராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிவிதமான வகையில் வளர்ச்சி இருக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இன்று காரிய வெற்றி உண்டாகும்.
மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பொருளாதாரமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி பொங்கும் நாளாக தான் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களிடம் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கரு நீல நிறம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் இளம் பச்சை நிறம்