ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த, கே.எல்.ராகுல் வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் ,தற்போது குணமடைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுலுக்கு , போட்டியின் போது வயிற்று வலி காரணமாக அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதிலிருந்து அவர் குணம் அடைந்துள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில், கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். வரும் ஜூன் 2 ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
இதனால் கே.எல்.ராகுல் அதற்குள் குணமடைந்து விட்டால் ,அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ள கே.எல். ராகுல் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், என்று அவருக்கு நெருக்கமானவர் மூலம் செய்தி கசிந்துள்ளது. அத்துடன் அவர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு ஒன்றரை மாத காலம் இருப்பதால் நிச்சயம் அவர் அணியுடன் இணைவார் என்று கூறினார் .