Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குணமடையாமலே டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி…!!

கோவை அரசு மருத்துவமனையில் முழுமையாக குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத் திணறலால் அவதிப்பட எந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிகாமல் அலைக்கழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கோவை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோய் தொற்று குணமாகாத நிலையில் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போது, சிகிச்சைக்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இரவு 7 மணிக்கு வந்த அவரை 4 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். இதன் பின்னர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அவருடைய  உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கும் அவரை சேர்க்காமல் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளனர். போலீசில் புகார் கூறியதை அடுத்து விடியற் காலை 4 மணியளவில் மீண்டும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முழுமையாக குணமடையாத கொரோனா நோயாளியை இ.எஸ்.ஐ மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததுடன், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு அவரை எந்த ஒரு மருத்துவமனையிலும்  சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் சுமார் 9 மணி நேரம் பெண் நோயாளி அலைக்கடிக்கப்பட்டதால் அவதிப்பட்டுள்ளார்.

Categories

Tech |