சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தைசுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சொந்தமான தரைதளம் குடியிருப்பு பயன்பாட்டுக்கு அல்லாமல் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து இந்த சீலை அகற்றக்கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விதிகளை மீறி குறிப்பிட்ட கட்டிடம் கட்டிய 1997 ஆம் ஆண்டு முதல் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்ட பிறகு திடீரென விழித்துக் கொள்ள காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தர பிறப்பிப்பதற்கு காரணமான மனுதாரருக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கட்டிடத்தை சீல் வைத்த போது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல் துறை அதிகாரிகள் யார்? என்ற விவரங்களை 7 ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பிறகு குடியிருப்பில் விதிமீறி கட்டப்பட்டுள்ள 3 வது தளம் தவிர்த்து மற்ற இரு தளங்களுக்கும், தரை தளத்திற்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு, விசாரணையை வருகின்ற 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும் தரைத்தள விதி மீறல்களை சரி செய்ய மனுத்தாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.