Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தில் கீழ் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் எல்கான்தாசன் மற்றும் சவரிவளன் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இரண்டு பெரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்துள்ளார்.

அதன் படி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் அருள் ஜார்ஜ் சகாய சாந்தி எல்கான்தாசன், சவரிவளன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை வழங்கினார்.

Categories

Tech |