அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வேப்பங்குளம் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் ஜெயராஜை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதே போன்று கோவில்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்ஜெயராஜ், வடிவேல் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.