2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவரும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் முத்துராமன் என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மீதும் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் மேலப்பாளையம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.