Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூர் காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் தன்னை காவல் நிலையத்தில் காட்டி கொடுப்பதாக நினைத்து அவரை அருண்குமார் கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அருண்குமாரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அருண்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |