Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழசெவல் பகுதியில் வசிக்கும் அய்யப்பன், பிராஞ்சேரி பகுதியில் வசிக்கும் வேல்முருகன், பேச்சிமுத்து, சிவா, மானூர் ரஸ்தா பகுதியில் வசிக்கும் மற்றொரு சிவா ஆகிய 5 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யபட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பொத்தன் குளம் பகுதியில் வசிக்கும் மகாராஜன், பாண்டி, சீதா ராமகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் 9 பேரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 9 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 9 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |