Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் வெள்ளபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோன்று ராஜவல்லிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பங்கமாக இருந்து வந்துள்ளார். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மணி மற்றும் அஜீத்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அந்த பரிந்துரையை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி களக்காடு காவல்துறையினர் ஜோசப் ஜெட்சன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை ஆகியோர் மணி மற்றும் அஜீத்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |