Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சட்ட விரோத செயல்” பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

சட்டத்திற்கு புறம்பான செயலை செய்த 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சங்கரபாண்டி என்பவரும், சிங்கிகுளம் பகுதியில் முத்து சுரேஷ் என்பவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியருக்கு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தார்.

அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |