Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் அந்தோனி லோயலான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஸ்பெர் என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிஸ்பெரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அனிஸ்பெரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அனிஸ்பெரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |