Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ தேவநல்லூர் பகுதியில் ஒரு நூலானது என்பவர் வசித்து வருகிறார் இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதே போன்று நாங்குநேரி பகுதியில் பலவேசக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இவர்கள் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின் ஏற்ற மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |