Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்…. குண்டர் சட்டத்தில் இருவர் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. !!

சட்டவிரோதமாக சாராயம் விற்ற 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் மாட்டுப்பட்டி பகுதியில் நாகப்பன் – ருக்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ருக்மணி சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து வீரணந்தல் கிராமத்தில் சந்தோஷ்ராஜ் என்பவரும் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரான மலர் என்பவருக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்று காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்பிறகு கையும் களவுமாக ருக்மணி மற்றும் சந்தோஷ் ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான பவன்குமார்ரெட்டி மாவட்ட ஆட்சியரான முருகேசுவிடம் இந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ருக்மணி மற்றும் சந்தோஷ்ராஜ் இருவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்ததோடு கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |