வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு காவல்துறை சூப்பிரண்டு கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணாங்குப்பம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மீது ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் வாலிபர் தொடர்ந்து மணல்க் கடத்தலில் ஈடுபட்டு இருந்திருகிறார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில் வாலிபரை குண்டர்ச் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி சிறையில் இருக்கும் வினோத்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.