திருநெல்வேலியில் காவல்துறையினர் வாலிபரை குண்டாஸில் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் சுடலை மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை குண்டாஸில் கைது செய்ய மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர், சுடலைமணியை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்பின் சுடலைமணி குண்டாசில் கைது செய்யபட்டதற்கான ஆணையை காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறையிலிருக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.