இன்று ஆப்கானிஸ்தானில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காபூலில் உள்ள ஈத் கா மசூதியில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி அந்த குண்டு வெடிப்பில் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எந்த ஒரு அமைப்பும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. மேலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பொறுப்பேற்ற பிறகு அங்கு ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.