குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பந்தோடு, சுங்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சேரம்பாடி பஜாருக்கு சென்று வருகின்றனர். ஆனால் சுங்கம் சேரம்பாடி இடையிலான சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோசமான சாலையின் காரணமாக பஞ்சராகி நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.