குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரபுவை சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் நிஷா பார்த்திபன் கவிதை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பரிந்துரை செய்துள்ளார்.
இதனையடுத்து பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் பிரபுவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு அதிரடியாக காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த பிரபுவை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.