Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தப்பு செஞ்சா இப்படித்தான்” குண்டர் சட்டத்தில் கைது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பாரதி மீது பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. இதனால் பாரதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு மாவட்ட சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் வழக்கு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் பாரதியை கைது செய்யுமாறு வழக்கு ஆவணங்களை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியரான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி பாரதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |