ஜெர்மனியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் மர்மம் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் Saxony மாநிலம் Karlswald பகுதியில் உள்ள சாலையின் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதியன்று சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் ஒரு குப்பை பையில் குழந்தையின் எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் எலும்புக்கூட்டை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு அப்பகுதியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாட்சிகளை விசாரித்த பிறகும் இன்னும் குழந்தையின் தாய் மற்றும் தந்தையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கு குறித்து தற்போது காவல்துறையினர் அறிக்கை அளிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். அதே நேரத்தில் காவல்துறை செய்தி தொடர்பாளர் Anja Leuschner கூறியபோது “புலனாய்வாளர்கள் மருத்துவ மற்றும் உளவியல் ரீதியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் தொடர்ந்து இந்த வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது ” என அவர் கூறியுள்ளார்.