குப்பைத்தொட்டியே குப்பையில் கிடைப்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் அதனை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்காக குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தினர். இந்நிலையில் குப்பைத்தொட்டிகளே குப்பையில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கும் குப்பை. மக்காத குப்பை என்று தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கென அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், இதுபோன்ற செயல்களால் நிதி வீணாகுவதாக மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் குப்பை தொட்டிகள் இல்லாததால் குப்பைகளை மக்கள் சாலையோரம் வீசி வருகின்றனர். இவ்வாறு வீசப்படும் குப்பைகளை அகற்றாததால் மழை நேரங்களில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது.
எனவே மழைக்காலங்களில் நீர் வழித்தடங்களில் கொட்டப்படும் குப்பைகளால் கழிவு நீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் நீர் தேங்கி நிற்கின்றது. ஆகவே இது பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றது. இதனால் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக கையாள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு குப்பை தொட்டிகள் பராமரிக்கப்படாமல் குப்பையில் கிடைப்பதால் ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகின்றது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகங்கள், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து குப்பைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.