குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடமாமந்தூர் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை பள்ளியின் பின்பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரித்தால் புகை அதிக அளவில் உற்பத்தியாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனையடுத்து நாள் முழுவதும் குப்பைகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே குப்பைகளை தீயிட்டு எரிக்க படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.