Categories
மாநில செய்திகள்

குப்பை கிடங்கில் கிடந்த 5 வயது சிறுமி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மகளை குப்பை கிடங்கில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கர்நாடகா பெண் மருத்துவர் இருமல் டானிக் கொடுத்து மகளை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு, எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊராட்சியில் குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை 5 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது பெண் ஒருவர் குழந்தையுடன் வந்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் முககவசம் மற்றும் கண்ணாடி அணிந்து இருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை. இந்நிலையில் தண்டுக்காரன்பாளையம் கிராம மக்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் பெண் ஒருவரும் ஊருக்குள் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.

அப்போது அவர் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார். போலீசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையைக் கொண்டு வந்து குப்பை கிடங்கில் வீசியது அந்தப் பெண் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சைலஜா குமாரி என்ற அந்தப் பெண் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் என்பது தெரியவந்தது. அவரின் கணவர் தர்ம பிரசாத் என்ஜினியராக இருந்துள்ளார்.

அவர்களுக்கு ஐந்து வயதில் மகள் க்யாரா என்பவர் இருந்துள்ளார். தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். ஒருவனை ஊரடங்கு காரணமாக வருவாய் இன்றி மன உளைச்சலுக்கு ஆளான சைலஜா, வேலை தேடி பல மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளார். அங்கு வேலை கிடைக்காத நிலையில், பெங்களூருவில் இருந்து பேருந்தில் மகளுடன் திருப்பூர் சென்றார். சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படவே அவிநாசி அருகே உள்ள கிராமத்தில் மகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி சென்றார்.

அங்கு அருகே உள்ள மருந்துக்கடையில் இருமல் டானிக்கை வாங்கி அதை மக்களுக்கு கொடுத்து மயங்கச் செய்தார். அதன் பிறகு அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று படிக்க வைத்துள்ளார். இதனையடுத்து எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது. இந் நிலையில் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |