குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடைப் பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது ஊடரங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் ஜிம்கானா பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் கொடைக்கானல் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குப்பையில் மனித எலும்புக் கூடை யார் வீசி சென்று உள்ளார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து விசாரணையில் குப்பையில் போடப்பட்டவை உண்மையான மனித எலும்புக்கூடுகள் இல்லை என்பதும், பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சிக்காக வைத்திருந்த மாதிரி எலும்புக்கூடுகள் என்பதும் தெரியவந்துள்ளது. அதன் பின் கண்காட்சி முடிந்ததும் மாணவர்கள் அந்த மாதிரி எலும்பு கூடுகளை குப்பையில் வீசி சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் உண்மையை அறிந்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் கொடைக்கானல் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.