Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குப்பைத்தொட்டியில் குழந்தையா….? கேமராவில் பதிவான காட்சிகள்…. சேலத்தில் பரபரப்பு….!!

குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மீனா தனது வீட்டின் அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் குப்பை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் இருந்த பையில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மீனா காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் குப்பைத்தொட்டி இருக்கும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு பெண் குப்பைத் தொட்டியில் பையை போட்டு செல்வது பதிவாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை வீசி சென்ற பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |