Categories
உலக செய்திகள்

குறைந்து வரும் கொரோனா தொற்று…. எல்லைகளை திறக்ககோரி வலியுறுத்தல்…. ஆஸ்திரேலியா பிரதமரின் அறிவிப்பு….!!

கொரோனா தொற்று காரணாமாக அடைக்கப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்ககோரி பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அங்கு இருக்கக்கூடிய மாகாணங்களின் எல்லைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாகாணத்தில் நேற்று 779 நபர்களுக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 961 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் 51 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக அடைக்கப்பட்ட உள்நாட்டு எல்லைகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீண்டும் திறக்ககோரி மாகாண மற்றும் பிராந்திய தலைவர்களை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார். இவற்றில் குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணங்கள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு தயங்கி வருகின்றது. இந்த வருட இறுதிக்குள் ஆஸ்திரேலியாவில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்பதால் அந்த மாகாண அரசுகள் தங்கள் எல்லைகளை திறக்க முன்வரவேண்டும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |