கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கின்றனர் என்பதை தற்பொழுது பார்க்கலாம்.
ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறித்து அறிய தனி மென்பொருளை உருவாக்கி உள்ள கூகுள் நிறுவனம், அதன் map சேவைகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதில் சில்லறைக் கடைகள், பொழுதுபோக்கு, மல்லிகை கடை, மருந்தகங்கள், பூங்காக்கள், போக்குவரத்து, ரெயில் நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளது . மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி இவரை உள்ள மக்கள் நடமாட்டம் விபரங்கள் வரை படங்களாக வெளியிடப்பட்டுள்ளது.
உணவகங்கள், வணிக மையங்கள், தீம் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், நூலகங்கள், திரைப்பட அரங்குகள் போன்ற இடங்களுக்கு மக்கள் நடமாட்டம் 77 சதவீதம் குறைந்துள்ளது. மளிகை கடைகள், உணவு கிடங்குகள், மருந்து கடைகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் 65 சதவீதம் குறைந்துள்ளது.
அதேசமயம் தேசிய பூங்காக்கள், பொது கடற்கரைகள், படகு சவாரி, நாய் பூங்காக்கள், பொது தோட்டங்கள் போன்ற இடங்களுக்கான மக்கள் நடமாட்டங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளது. சுரங்கப்பாதை, பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து மையங்கள் போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் 71 சதவீதம் குறைந்துள்ளது.
பணியிடங்களில் மக்கள் நடமாட்டம் 47 சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள ஒரே இடம் குடியிருப்பு பகுதிகளில் மட்டும் தான், இங்கு 22 சதவீதம் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. GOOGEL LOCTION HISTORY மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்ட தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் இந்த தகவல்கள் வைரஸ் பரவுவதை தடுக்க பொது சுகாதார அதிகாரிகளுக்கு பெரிதும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.