Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் குறைகேட்பு கூட்டம்…. செல்போனில் முழ்கிய அதிகாரி…. கடலூரில் பரபரப்பு….!!

அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரி ஒருவர் யூடியூப்பில் சமையல் பற்றிய வீடியோ பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பின் தற்போது பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது மொபைல் போனில் மூழ்கிய நிலையில் யூடியூப்பில் சமையல் குறிப்பு தொடர்பான வீடியோக்களை குறைகேட்பு கூட்டம் முடியும் வரை ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பொதுமக்கள் மற்றும் அருகாமையிலிருந்த பிற அதிகாரிகள் கூட்டத்தை கவனிக்காமல் சமையல் குறிப்பு பார்த்ததை கண்டு புலம்பி உள்ளனர்.

Categories

Tech |