Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

12 ஆண்டுகள் கழித்து… பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்… மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவானது தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், பல்வேறு வகையான அலங்கார மற்றும் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளன. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் சிம்ஸ் பூங்கா படகு இல்லம் அருகே தற்போது பூத்து குலுங்குகின்றன.

இதனையடுத்து சுற்றுலா பயணிகள் நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள் புகைப்படம் எடுத்தும், அதன் அருகே நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றன. மேலும் நீலகிரி வனப்பகுதியில் இந்த குறிஞ்சி செடிகளின் 17 வகையான செடிகள் வளர்கின்றன. இந்த குறிஞ்சி செடிகளில் இருந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்டெப்பிலாந்தஸ் குந்தியானஸ் என்ற குறிஞ்சி மலர் பூக்கின்றன. இந்த சிம்ஸ் பூங்கா நர்சரியில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வமாக தங்களது வீடுகளுக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |