விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் நன்மைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு அதிக பட்சத்தில் 2 ஏக்கர்களுக்கு இடுபொருட்கள் கொடுக்கப்படுகின்றது. அதில் 50 சதவீத மானியத்தில் விதைகள், ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் பசுந்தாள் உரம் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ கொடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் இடுபொருள் வாங்குவதற்கு விண்ணப்பிக்க திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மற்றும் கச்சனம் பகுதி விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு திரண்டு வருகின்றனர்.
எனவே கடந்த சில நாட்களாக அங்கு விவசாயிகள் வரிசையில் காத்திருந்து குறுவை தொகுப்பு திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அங்கு வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது, குறுவை தொகுப்பு திட்டத்தின் நன்மைகள் விவசாயிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு உரிய திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.