Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்புவுக்கு அடுத்து இவங்கதான்… நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி தீபாராதனை காண்பித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை நிதி அகர்வால் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த இரண்டு படங்களுமே பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது . மேலும் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நிதி அகர்வால்க்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி தீபாராதனை காண்பித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . ஏற்கனவே குஷ்பு உள்ளிட்ட நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ள ரசிகர்கள் தற்போது நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |